ஏற்றுமதி ஆர்டர் 6 மாதத்தில் 20% அதிகரித்த ரகசியம்..
இன்று பலருக்கும் சவாலாக இருப்பது எப்படி நாம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சரியான இறக்குமதியாளரை கண்டுபிடிப்பது என்பது தான்.
ஆன்லைன் மூலமாக நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் சிக்கல் நிலவரது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
மத்திய அரசு அமெரிக்க ஐரோப்பா தவிர்த்து வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினாலும் பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் அந்த முயற்சியை எடுப்பதில்லை.
ஆனால் தோல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் சரியாக திட்டமிட்டு செயல்பட்டதனால் கடந்த ஆறு மாதத்தில் அவர்களது ஏற்றுமதி 20% வளர்ந்திருக்கிறது.
வழக்கமாக அவர்கள் ஏற்றுமதி செய்யும் வளர்ந்த நாடுகளை தவிர்த்து மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளை குறிவைத்து ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்ததன் விளைவு இந்த பலன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு துபாயில் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு மேற்காசியா மற்றும் படம் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.
துபாயில் நடைபெற்ற இந்த வர்த்தக கண்காட்சி மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாக பிரமோட் செய்யப்பட்டது.
அதன் விளைவு அந்த நாடுகளில் இருந்து பல்வேறு இறக்குமதியாளர்கள் வந்தனர். ஏற்றுமதி ஆர்டர்களும் தந்தனர். மேலும் ஐக்கிய அரபா அமீரகம் துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பெரிய அளவில் ஆடல்களை தந்ததன் விளைவு ஆறே மாதத்தில் 20 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி..
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment