இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்த 35 நாடுகள்.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதால் தங்களது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு ஒரு மாற்றை பல நாடுகள் எதிர்பார்க்கின்றன.
இந்தியா ரஷ்யா இடையிலான வர்த்தகம் அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசியா, ஸ்காண்டிநேவிய மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன.
நமது நெருங்கிய நாடுகளான ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் இந்த ரூபாய் வர்த்தகத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
யூகோ வங்கி மற்றும் இண்டஸ் இன்டு வங்கி மூலம் ரஷ்யாவிற்கு இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மியான்மர் நாட்டில் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அன்னியச் செலவு பண்ணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள இப்படி பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment