வங்கியின் சிறு தவறால் 21 லட்சம் இழந்த ஏற்றுமதியாளர்.

வங்கியின் சிறு தவறால் 21 லட்சம் இழந்த ஏற்றுமதியாளர்.

ஏற்றுமதியாளருக்கு வங்கி பல்வேறு வகைகளில் உதவுகிறது.
அப்படிப்பட்ட வங்கி ஒன்று செய்த தவறால் ஒரு ஏற்றுமதியாளர் 21 லட்ச ரூபாய் இழந்துள்ளார்.
DP பேமெண்ட் முறையில் 21 லட்ச ரூபாய் மதிப்புள்ள சரக்கை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து உள்ளார்.
இந்த ஆர்டருக்காக தனது வீட்டை அடகு வைத்து அதை வங்கியில் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
வங்கி ஆவணங்களை இறக்குமதியாளர் வங்கிக்கு அனுப்புவதற்கு பதிலாக இறக்குமதியாளருக்கு நேரடியாக அனுப்பி விட்டது.
இது முழுக்க முழுக்க வங்கி செய்த தவறு.
இந்த தவறை வங்கி மூடி மறைத்து பழியை இறக்குமதியாளர் வங்கியின் மீது போட்டது.
இறக்குமதியாளர்கள் வங்கி இதை முழுமையாக நிராகரித்து விட்டது.
இது நடந்து சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.
இறக்குமதியாளர் சட்ட உதவியை நாடியுள்ளார்.
இன்று வரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
அடகு வைக்கப்பட்ட வீட்டிற்கு பணம் செலுத்தியுள்ளார்.
ஆனால் அவருக்கு வர வேண்டிய 21 லட்சம் பணம் இன்னும் வரவில்லை.
அனுப்பப்பட்ட சரக்கை இறக்குமதியாளர் எடுத்து விற்று விட்டார்.
இறக்குமதியாளரிடம் கேட்டபோது எனக்கும் எனது வங்கிக்குமான உறவை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
ஒரு வங்கி செய்த தவறால் ஒரு ஏற்றுமதியாளர் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று பாருங்கள்.
ஒரு ஏற்றுமதியாளருக்கு இது போன்று பிரச்சனை வராமல் இருக்க ஆவணங்களை வங்கி அனுப்பும்போது அதில் இறக்குமதியாளருக்கு பதிலாக இறக்குமதியாளரின் வங்கி விலாசம் சரியாக இருக்கிறதா என்பதை ஏற்றுமதியாளர் நேரடியாக பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments