190 நாடுகளில் உங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு.
FIEO அமைப்பு இந்தியன் பிசினஸ் போர்டல் என்ற தளத்தை உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்கள் உலகம் முழுவதும் தங்களது பொருட்களை இகாமர்ஸ் ஏற்றுமதி செய்ய முடியும்.
சில வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போர்டல் தற்போது இந்திய தூதரகங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் பிரமோட் செய்யப்படுகிறது.
அமேசான், ebay போன்ற தளங்களில் டெலிவரி பார்ட்னராக உள்ள ஷிப் ராக்கெட் நிறுவனம் தற்போது இந்தியன் பிசினஸ் போர்டல் தளத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்த ஷிப் ராக்கெட் நிறுவனம் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
ஆகவே உங்களது பொருளை அனைத்து நாடுகளிலும் கொண்டு சேர்க்க இவர்களால் முடியும்.
தனிப்பட்ட முறையில் ஷிப் ராக்கெட் நிறுவனத்தில் ஒருவர் கணக்கு துவங்க ஆகும் செலவை விட இந்தியன் பிசினஸ் போர்டல் மூலமாக கணக்கு துவங்கும் போது 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.
இந்தியாவில் பல்வேறு கிராமங்களிலும் இவர்களுக்கு கிளைகள் உள்ளன.
எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் ஒரு பொருளை தயார் செய்பவர் இந்தியன் பிசினஸ் போர்டல் மூலமாக உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வழி கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஃபெடரேஷன் ஆப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் கீழ் வரும் இந்தியன் பிசினஸ் போர்டல் இணையதளத்தை பாருங்கள்..
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment