ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் வாய்ப்பு..

ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் வாய்ப்பு..

பித்தளை பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு பிரசித்தி பெற்ற இடம் குஜராத் மாநிலத்தை சார்ந்த ஜாம்நகர் பகுதியாகும்.
பித்தளையிலிருந்து பல்வேறு கலைப்பொருட்கள் மற்றும் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் இடம் இது.
இந்தப் பகுதியில் இருந்து அதிக அளவில் பித்தளை பொருட்கள் தெற்காசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கனவாகவே இருந்தது.
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஒரு சில ஏற்றுமதியாளர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்தனர்.
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெஷின்கள் மூலம்தயாரிக்கப்பட்ட பித்தளை பொருட்கள் மட்டுமே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
அப்படி இறக்குமதியாகும் ஒரு மிஷினின் விலை 80 லட்ச ரூபாய் ஆகும்.
இந்த அளவிற்கு முதலீடு செய்து மிஷினை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்றுமதியாளர்களாலும் முடியவில்லை.
ஆனால் தற்போது இந்த மெஷின் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது.
இதன் விலை 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை உள்ளது.
இப்போது பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு இந்த மெஷின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.
இப்படி தயாரிக்கப்படும் பொருட்களில் சேதம் என்பது இல்லை.
பொருளின் தரம் மிக உயர்ந்ததாக உள்ளது.
ஆகவே தொடர்ந்து இவர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன.
ஆனால் வேறு ஒரு சிக்கல் இப்போது நிலவுகிறது.
இந்தப் பொருள்களை தயாரிப்பதற்கான மூலப்பொருள் பித்தளை ஸ்கிராப் நமது நாட்டில் கிடைப்பதில்லை ஆகவே நாம் இறக்குமதியை நம்பி இருக்கிறோம்.
நமது ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதம் அமெரிக்கா மற்றும் 20% ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கிடைக்கிறது.
ஒரு மாதத்திற்கு 8000 டன்கள் அளவிற்கு பித்தளை ஸ்கிராப் தேவைப்படுகிறது.
ஜாம்நகரில் தயாரிக்கப்படும் பித்தளை பொருட்களில் 20 சதவீதம் ஏற்றுமதிக்கும் 70% உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
பித்தளை ஸ்கிராப் இறக்குமதி மற்றும் பித்தளை பொருட்களை ஏற்றுமதி இரண்டிலும் வாய்ப்பு உள்ளது.
#ஏற்றுமதி 


Comments