நிலக்கடலை ஏற்றுமதி வாய்ப்புகள்
கடந்த வருடம் சுமார் 610 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிலிருந்து நிலக்கடலை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகள் அண்டை நாடுகளே.
மிக எளிமையாக நாம் மார்க்கெட்டிங் செய்யக்கூடிய நாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்துள்ளோம்.
நிலக்கடலை இந்தியாவில் வருடம் முழுவதும் கிடைக்கும் பொருளாகும்.
ஏற்றுமதி தொழிலுக்கு புதிதாக வருபவர்கள் நிலக்கடலை ஏற்றுமதியை தேர்வு செய்வது நல்லது.
கடந்த வருடம் நாம் இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள் தாய்லாந்து பங்களாதேஷ், ஈரான், நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் உக்கிரன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
இதில் பெரும்பாலான நாடுகள் நமக்கு மிக அருகில் உள்ள நாடுகளாகும்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment