விரக்தியில் கேரள ஏற்றுமதியாளர்கள்..

விரக்தியில் கேரள ஏற்றுமதியாளர்கள்..

கொச்சின் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
ஒன்று அதிக போக்குவரத்துச் செலவு.
இரண்டாவது போக்குவரத்துக்கான கால அளவு.
கொச்சினில் இருந்து தினமும் 250 மெட்ரிக் டன்கள் அளவிற்கு விமான மூலமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் 375 கண்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கொச்சின் துறைமுகத்திலிருந்து துபாய் துறைமுகம் வரை ஒரு 40 அடி கண்டெய்னர் அனுப்புவதற்கான செலவு 1545 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஆனால் அதே நேரத்தில் மும்பை துறைமுகத்திலிருந்து 40 அடி கண்டனர் ஒன்றை துபாய்க்கு அனுப்புவதற்கான செலவு வெறும் 533 டாலர்கள் மட்டுமே.
இது மட்டுமல்லாமல் கொச்சின் துறைமுகத்திலிருந்து கப்பல் துபாய் துறைமுகத்தை அடைவதற்கான கால அளவு 14 நாட்கள்.
கத்தார் துறைமுகத்தை அடைய 18 நாட்கள்.
சவுதி அரேபியா நாட்டிற்கு செல்ல 22 நாட்கள் ஆகும்.
ஆனால் மும்பையில் இருந்து வெறும் ஐந்து நாட்களில் வளைகுடா நாடுகளை கப்பல் அடைந்து விடுகிறது.
இதுபோன்ற கால தாமதத்தை தவிர்ப்பது மற்றும் போக்குவரத்து செலவு குறைவது போன்றவை இறக்குமதியாளர்களை மும்பை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப ஊக்குவிக்கின்றன.
இதனால் சுமார் 150 ஏற்றுமதியாளர்கள் கொச்சின் துறைமுகத்தை தவிர்த்து மும்பை துறைமுகத்தை நாடி உள்ளனர்.
VKC என்ற காலனி தயாரிக்கும் நிறுவனம் கொச்சின் துறைமுகத்திலிருந்து 125 லிருந்து 150 கண்டைனர்கள் வரை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.
தற்போது அவர்கள் முழுமையாக மும்பை துறைமுகத்தை நோக்கி சென்று விட்டனர்.
இந்த பிரச்சனை பற்றி கொச்சின் துறைமுகத்தை அணுகிய போது அவர்களின் விளக்கம் வேறு மாதிரியாக இருந்தது.
கொச்சின் துறைமுகத்தில் கண்டெய்னர் தட்டுப்பாடு இன்னும் நிலவுகிறது.
கண்டெய்னரை வேறொரு துறைமுகத்திலிருந்து கொண்டு வருவதற்கு சுமார் 600 டாலர்கள் செலவாகிறது. இதுவே போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
கொச்சின் துறைமுகத்தில் இருந்து செல்லும் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் சரக்கு முனையத்தில் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. மும்பை துறைமுகத்தில் இருந்து செல்லும் கப்பல்கள் கொழும்புக்கு செல்வதில்லை.
மத்திய அரசு கொச்சின் துறைமுகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய இந்த சூழலை கவனிக்க வேண்டும்.
#ஏற்றுமதி

Comments