இந்தியாவை கிண்டலடிக்கும் நாடுகள்.

இந்தியாவை கிண்டலடிக்கும் நாடுகள்.

நமது ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை  சில ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் விமர்சித்துள்ளன.
சமீபத்தில் பாரத பிரதமர் அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையில் “இந்தியாவில் ஒரு சில விவசாய  பொருள்கள் அபரிமிதமாக விளைச்சலைக் கொடுத்துள்ளது. இப்படி அளவுக்கு அதிகமாக விளைந்த விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய  உலக வர்த்தக மையத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தடைக்கல்லாக உள்ளது.  அதே நேரத்தில் இந்தப் பொருள்கள் உலகத்தில் பல்வேறு நாடுகளில் தேவைப்படுகிறது.  ஆகவே இந்த ஒப்பந்தத்தில் குறுகியகால தளர்வு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.”
இதைத்தான் சில நாடுகள் விமர்சித்துள்ளன.
இந்தியா கோதுமை மற்றும் குருணை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது..
உலகத்தில் பல நாடுகளில் கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையின் தேவை மிக அதிகமாக உள்ளது.
அதிக அளவில் தேவைப்படும் பொருட்களுக்கு ஏற்றுமதி  தடைவிதித்து விட்டு,   மற்ற விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்ட இந்தியா முனைப்பு காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நாடுகள் இந்திய மக்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.
இவர்களைப் பொறுத்தவரை வணிகமே முக்கியம்.
ஆனால் இந்தியாவின் பார்வை வேறு.
உணவுப் பஞ்சத்தில் இந்தியா சிக்கிக்கொண்டால்,  அல்லது இந்தியாவில் உணவு பணவீக்கம் மிக அதிகமாக இருந்தால் உலகத்தில் எந்த நாடும்   இந்திய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
ஆகவே மக்களின் தேவையை முதலில் பூர்த்தி  செய்துவிட்டு எஞ்சியிருக்கும் பொருளை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை நியாயமானது.  இந்த நியாயம் ஒரு சில நாடுகளுக்கு புரிவதில்லை.
#exportbusiness 


Comments