தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் மூலம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் இந்தியா.
நாம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் செய்கிறோம்.
இறக்குமதியில் அத்யாவசியமற்ற பொருட்களும் அடங்கும்.
அப்படிப்பட்ட பொருள்களில் தரக்குறைவான பொருட்களும் அடங்கும்.
இதன் மூலம் நம் கஷ்டப்பட்டு ஈட்டி அணிய செலாவணி விரயமாக்கப்படுகிறது.
இதை உணர்ந்த இந்திய அரசு ஒரு புதிய வழிமுறையை இரண்டு வருடங்களுக்கு முன்பு மேற்கொண்டது.
நாம் அதிக அளவு பொம்மைகளை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
இதில் சைனாவில் இருந்து நாம் இறக்குமதி செய்வது அதிகமாகும்.
அப்படி இறக்குமதி செய்யக்கூடிய பொம்மைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஓர் அரசாணை இரண்டு வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
அதன்படி தரம் இல்லாத பொம்மைகள் இறக்குமதி என்பது முற்றிலுமாக நின்று போனது.
ஒட்டுமொத்த பொம்மைகள் இறக்குமதி சுமார் 70% குறைந்தது.
இதன் மூலம் பெரிய அளவில் அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டது.
தற்போது இதே போன்ற ஒரு நடவடிக்கையை மின்விசிறி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஸ்மார்ட் பம்ப் ஆகிய இரு பொருள்களுக்கும் மேற்கொள்ள மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
நமது கடந்த வருட மின்விசிறி இறக்குமதியின் மதிப்பு 132 மில்லியன் டாலர்கள் ஆகும்.
சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மின்விசிறியின் மதிப்பு மட்டும் 1330 மில்லியன் டாலர் ஆகும்.
அதேபோல எலக்ட்ரானிக் ஸ்மார்ட் பம்ப் இறக்குமதியின் மதிப்பு 3.1 மில்லியன் டாலர்கள் ஆகும்.
இதன் மூலம் வரும் காலத்தில் இந்த பொருட்கள் இறக்குமதி வெகுவாக குறைய வாய்ப்புண்டு. அதே நேரம் இதே பொருளை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பயன்பெற வாய்ப்புண்டு.
#ஏற்றுமதி
Comments
Post a Comment