புண்ணாக்கு ஏற்றுமதியில் நிகழ்ந்த மாற்றம்.
இந்தியாவில் புண்ணாக்கு ஏற்றுமதி என்பது நல்ல லாபத்தை தரும் ஒரு ஏற்றுமதி தொழில்.
இதுவரை சோயா புண்ணாக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
பெரும்பாலும் வட இந்தியர்கள் சோயா புண்ணாக்கை அதிக அளவில் ஏற்றுமதி செய்தனர்.
ஆனால் சமீபத்திய தரவு புண்ணாக்கு ஏற்றுமதியில் ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
வருடா வருடம் உயர்ந்து கொண்டிருந்த சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி கடந்த வருடம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
ரேப் விதை புண்ணாக்கு ஏற்றுமதி இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது.
கடலை புண்ணாக்கின் ஏற்றுமதி தரவு நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
கடந்த முறை 1390 டன்னாக இருந்த ஏற்றுமதி தற்போது ஒன்பதாயிரத்தி 632 டன்னாக உயர்ந்துள்ளது.
நெல் உமி புண்ணாக்கு மற்றும் ஆமண புண்ணாக்கு ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
நம்மிடமிருந்து அதிக அளவில் புண்ணாக்கை வாங்கும் நாடுகள் தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் தைவான்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment