இந்தியாவை எதிர் நோக்கி காத்திருக்கும் பாகிஸ்தான்

இந்தியாவை எதிர் நோக்கி காத்திருக்கும் பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் பல வருடங்களாக நடக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.
தற்போது பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பல பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்புகள் உருவாகியுள்ளன.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் அழிந்துள்ளன.
லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகி உள்ளன.
லட்சக்கணக்கான மக்கள்  வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளும் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து விவசாய மற்றும் உணவு பொருட்களை இறக்குமதி செய்கிறது பாகிஸ்தான்.
அதில் இரண்டு பிரச்சனைகள்.
ஒன்று பாகிஸ்தான் மக்களின் தேவைக்கு ஏற்ப  அதிக அளவிலான பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.
இறக்குமதி  செய்வதற்கான செலவினங்கள் மிக அதிகமாக உள்ளது.
இதை உணர்ந்து பாகிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக தலைவர் பாகிஸ்தான் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.
நமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய நாம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்.
அவர்களால் நமது  முழு  தேவையையும் ஈடு கொடுக்க முடியும்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் போது நமக்கு அதிக செலவு ஆகாது.
இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
சில  வாரங்களுக்குப் பிறகு,  பாகிஸ்தானின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இதே கோரிக்கையை பாகிஸ்தான் அரசுக்கு  வைத்தது..
இதுபோன்ற பல்வேறு அமைப்புகள் பழைய பகையை மறந்து விட்டு  இந்தியாவுடன் வர்த்தகத்தை துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசு விரைவில் இது சம்பந்தமாக இந்தியாவிடம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தக வாய்ப்புகள் உருவானால் அரிசி கோதுமை போன்ற ஏற்றுமதி கட்டுப்பாடு உள்ள பொருட்களை இந்திய அரசே நேரடியாக பாகிஸ்தான் அரசுக்கு ஏற்றுமதி செய்யும்.
மற்ற பொருட்களான விவசாய பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவை  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களால் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.  இந்த வாய்ப்பு உருவானால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய மாநிலங்கள் பெரிய அளவில் ஏற்றுமதி ஆர்டர்களை பெற வாய்ப்புண்டு.
#export #exportbusiness #ஏற்றுமதி 


Comments