ஏற்றுமதியாளர்களுக்கு 5000 கோடி ரூபாய் வழங்க முன் வந்த அரசுகள்

ஏற்றுமதியாளர்களுக்கு 5000 கோடி ரூபாய் வழங்க முன் வந்த அரசுகள்.

கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் இந்திய ஏற்றுமதி 16 சதவீதம் குறைந்தது.
இது தொடர்ந்தால் நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை உணர்ந்த மத்திய அரசு ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் வந்து நிலையை நிலவுவதால் ஆப்பிரிக்க நாடுகளை மார்க்கெட் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
ஏற்றுமதி கடன் உறுதி கழகம் வாயிலாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன் உறுதி கொடுக்க மத்திய அரசு முயல்கிறது.
மேலும் இந்திய அளவில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் சுமார் 50 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அந்த மாவட்டங்களில் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு 3000 கோடியிலிருந்து 5000 கோடி நிதி உதவி வழங்க முடிவெடுத்துள்ளது.
இதில் மத்திய அரசின் பங்கு 60% ஆகவும் மாநில அரசின் பங்கு 40 சதவீதமாகவும் இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனியார் ஏற்றுமதியாளர்களும் இதன் மூலம் பயன்படலாம்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இதற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வர்த்தக கொள்கை வரும் ஏப்ரல் மாதம் அமலாக்கும் போது அதில் இந்த நிதி வழங்கும் நடவடிக்கை சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
#ஏற்றுமதி

Comments