இந்தியாவிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் ரஷ்யா.

இந்தியாவிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் ரஷ்யா.

உலகில் இன்று மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கும் நாடு ரஷ்யா.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் அதன் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்யக்கூடாது என்பதை எழுதப்படாத விதி.
உலகின் பல நாடுகள் ரஷ்யாவுடன் இருக்கும் தனது வர்த்தகத்தை துண்டித்துக் கொண்டன.
ஆனால் இந்தியாவுடன் ஆன வர்த்தகம் பெருமளவில் உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறது.
அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் பொருட்களின் அளவு குறைவு.
இந்தச் சூழலில் ரஷ்யா இந்தியாவிற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி படியாக உள்ளது.
பெருமளவிலான இன்ஜினியரிங் பொருட்கள் ரஷ்யாவிற்கு தேவைப்படுகின்றன.
குறிப்பாக ரயில் பேருந்து உட்பட பல்வேறு போக்குவரத்து சம்பந்தப்பட்ட உதிரி பாகங்கள் பெருமளவில் தேவைப்படுகின்றன. இதைத் தவிர்த்து உணவு பொருட்கள் மற்றும் மது வகைகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய ரஷ்யா விரும்புகிறது.
இந்தியா இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புவதாக தெரிகிறது.
ஆனால் இது பற்றி பொது வழியில் ரஷ்யாவோ அல்லது இந்தியாவோ வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தால் உலக நாடுகளிலும் இருந்து எதிர்ப்பு வரும் என்பதும் காரணமாக இருக்கலாம்.
இந்த பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தால் பெரிய அளவில் இந்திய ரஷ்ய வர்த்தகம் மேம்படும்.
#ஏற்றுமதி

Comments