ஐந்தே மாதங்களில் 1.47 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி பெற்றுத் தந்த மாற்றுச் சிந்தனை.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரண்டு நாடுகளும் அதிக அளவில் ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
இரண்டு நாடுகளுக்கும் முக்கியமான மார்க்கெட் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது.
இதை கருத்தில் கொண்டு இந்திய அரசு வேறு சில மார்க்கெட்டுகளை குறிப்பாக ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
ஆனால் நமது ஏற்றுமதியாளர்கள் அதை அத்தனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதே போன்ற கோரிக்கையை பங்களாதேஷ் அரசும் அந்த நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வைத்தது.
அவர்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஜப்பான், ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக முயற்சி எடுத்தனர்.
இதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியில் கடந்த ஐந்து மாதங்களில் ஒரு லட்சத்தி 47 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய செலாவணியை ஈட்டி இருக்கின்றனர்.
இதே காலகட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியில் நாம் வெறும் 46 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஈட்டி இருக்கிறோம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பல்வேறு இலவச வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே நமக்கு இப்போதைக்கு நல்ல வருமானம் தரக்கூடிய வழியாகும்.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment