இந்திய மாம்பழத்தை வாங்கும் புதிய நாடுகள்


உலக அளவில் இந்தியா மாம்பழத்திற்கு  தனி மரியாதை உண்டு.
பல்வேறு நாடுகள் இந்திய மாம்பழங்களை தொடர்ந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கின்றன.
இந்த வருடம் ஒரு சில நாடுகள் புதிதாக இந்திய மாம்பழத்தை வாங்க ஆரம்பித்திருக்கின்றன.
ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்த நாடுகள் தங்களது இறக்குமதி அளவை உயர்த்தி இருக்கின்றன.
அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
நமது மாம்பழ ஏற்றுமதியில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் நாடு அமெரிக்கா.
கடந்த இரண்டு வருடங்களாக இந்திய மாம்பழத்தை அமெரிக்கா வாங்கவில்லை.
நோய் தொற்று காலம் என்பதால் சர்வதேச விமான போக்குவரத்து தடை இருந்ததால் ஏற்றுமதி நடைபெறவில்லை.
ஆனால் இந்த வருடம் ஆயிரம் டன் அளவிற்கு அவர்கள் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
அடுத்த நாடு ஜப்பான்.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் அவர்களது இந்திய  மாம்பழங்கள் இறக்குமதி இரு மடங்காகி உள்ளது.
இதற்கான முக்கிய காரணம் ஜப்பானில் உள்ள இந்திய  தூதரகம் மற்றும் APEDA  இணைந்து மேற்கொண்ட முயற்சியே.
அர்ஜென்டினா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்துள்ளனர்.
மலேசியா கேசர் மற்றும் அல்போன்சா ரக மாம்பழங்களை அதிக அளவு இறக்குமதி செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சுமார் 10 முதல் 15 சதவீதம் அளவிற்கு மாம்பழ ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்திய தூதரகங்கள் பல்வேறு நாடுகளில் மாம்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
பக்ரைன் நாட்டில் மாம்பழத் திருவிழா நடத்தப்பட்டது.
ரஷ்யாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழத்திற்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்டது.   போர்ச் சூழலிலும் ரஷ்யா இந்தியாவிலிருந்து இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களை இறக்குமதியும் செய்திருந்தது.
அதோடு பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் அடுத்த வருடம் இந்திய மாம்பழங்களை அதிகளவு ஏற்றுமதி  செய்ய வாய்ப்புகள் உண்டு என்று APEDA  செய்திக் குறிப்பு கூறுகிறது.

Export Import Business Consultant - WhatsApp 91-9043441374

#export #exportbusiness #ஏற்றுமதி 


Comments