.
உலக அளவில் நிலையற்ற தன்மை நிலவினாலும், இந்திய இறக்குமதி அதிகரித்தாலும், மத்திய அரசு ஏற்றுமதியை அதிகரிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
ஏற்றுமதியை தொடர்ந்து அதிகரித்தால் தான் அந்நியச்செலாவணி இழப்பை நாம் தவிர்க்க முடியும் அல்லது குறைக்க முடியும்.
அதற்காக பல்வேறு நாடுகளுடன் நாம் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்கிறோம்.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக தோடு நாம் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டோம்.
தற்போது இங்கிலாந்துடன் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த முறை இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் அவர்கள் இந்தியா வரும்போது இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.
வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இரு நாடுகளுக்கும் இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
அதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தீபாவளிக்கு முன்னதாகவே அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் இஸ்ரேல் கனடா போன்ற நாடுகளோடு இந்தியா இந்த வருடமே இலவச வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்கு நாம் இலவச வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது விவசாய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாம் ஒரு புதிய நிலையை எட்ட கூடும்.
WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment