இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஏற்றுமதி மேம்பாட்டு வாரியங்கள் உள்ளன.
இந்திய ஏற்றுமதியை அதிக அளவில் மேம்படுத்துவதற்காக இவை உருவாக்கப்பட்டுள்ளன.
மேம்பாட்டு வாரியங்களின் பணிகள் மகத்தானவை.
ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் இந்த மேம்பாட்டு வாரியங்களை சரியாக பயன்படுத்தினால் ஏற்றுமதி தொழிலில் நன்கு வளர முடியும்.
தற்போது இந்த ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய பதிவுகள் அனைத்தும் DGFT இணையதளம் மூலமாகவே மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தனித்தனியாக அந்த குறிப்பிட்ட மேம்பாட்டு வாரியங்களின் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டியதில்லை.
இதன் மூலம் நேரம் மிச்சமாகிறது.
தவறுதலாக நிறுவனத்தின் பெயர் அல்லது விலாசம் போன்றவை பதவி ஏற்ற படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
தற்போது பல மேம்பாட்டு வாரியங்களில் உறுப்பினராக இருக்கக்கூடிய காலத்தை அதிகரித்துள்ளனர்.
முன்பெல்லாம் இந்த கால அளவு ஒரு வருடம் என்றே இருக்கும்.
இப்போது மூன்று வருடம், ஐந்து வருடம் என்று நம் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள முடியும்.
இப்படி அதிக காலத்திற்கு நாம் உறுப்பினராக ஆகும்பொழுது உறுப்பினர் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய பதிவின்போது நாம் வங்கியிடம் இருந்து ஒரு கடிதம் வாங்கி அதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த கடிதத்தை பலரும் தவறுதலாக புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.
இந்த கடிதத்தில் என்னென்ன நிரப்பப்பட வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள்.
அதை வங்கி அதிகாரிகள் கையிலேயே எழுதி, கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்கள்.
கண்டிப்பாக அப்படி செய்யக்கூடாது.
அந்த படிவத்தில் உள்ள அனைத்தும் வங்கியின் லெட்டர் பேடில் டைப் செய்யப்பட்டு, வங்கி அதிகாரியின் கையொப்பம் பெறப்பட்டு, வங்கி முத்திரையோடு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .
பலரும் செய்யக்கூடிய தவறு.
இந்தத் தவறின் மூலம் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய பதிவு காலதாமதமாகும்.
இந்த தவறை செய்யாமல் ஆன்லைனில் சரியான படிவத்தை பதிவேற்றும் போது உடனடியாக உங்களுக்கு RCMC வழங்கப்பட்டுவிடும்.
Export business consultant
WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment