சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது APEDA. இணைந்து செயல்பட்டது கர்நாடக விவசாய கல்லூரி மற்றும் கர்நாடக விவசாய பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம். இந்த ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் சந்தித்து ஒரு பழத்துக்காக நடைபெற்றது. அதுதான் டிராகன் பழம். கர்நாடகத்தில் டிராகன் பழத்தை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியாளர்கள் வந்திருந்தனர். இறக்குமதியாளர்களை அழைத்து வரும் பொறுப்பை APEDA மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டது. இந்தியாவில் டிராகன் பழம் பல்வேறு இடங்களில் தற்போது பயிரிடப்பட்டாலும் ஏற்றுமதி தரம் வாய்ந்த டிராகன் பழம் உற்பத்தி ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அப்படி ஏற்றுமதி தரம் வாய்ந்த டிராகன் பழம் உற்பத்தி செய்பவர்கள் இந்த ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் இதே தரத்தில் டிராகன் பழம் எங்கெங்கெல்லாமோ உற்பத்தி செய்யப்படுகிறது அங்கெல்லாம் இதேபோன்ற இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் சந்திப்பு நடத்த APEDA திட்டமிட்டுள்ளது. உங்கள் பகுதியில் இதே மாதிரி ஏற்றுமதி தரம் வாய்ந்த டிராகன் பழம் உற்பத்தி செய்யப்பட்டால் அங்கும் இந்த ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட வாய்ப்பு உண்டு. APEDA நிறுவனத்தின் இணையதளத்தை அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கள், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Export Business Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment