இந்தியாவில் செயற்கை வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிக அளவில் வளர்ந்து வருகிறது. செயற்கை வைர உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் குஜராத். தமிழகத்தில் கோவை சென்னை போன்ற பகுதிகளில் செயற்கை வைர உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. செயற்கை வைரங்கள் ஆகவும் செயற்கை வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள் ஆகவும் நாம் ஏற்றுமதி செய்கிறோம். உலக அளவிலான செயற்கை வைர மார்க்கெட்டில் 15% கையில் வைத்திருக்கும் நாடு இந்தியா. மற்றும் நவரத்தின கற்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் சமீபத்தில் செயற்கை வைர ஏற்றுமதி பற்றி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார். இந்த வருடம் அல்லது அடுத்த வருடமே செயற்கை வைர ஏற்றுமதி என்பதை இருமடங்காக வாய்ப்புண்டு என்று அவர் கூறியிருந்தார். (கடந்த வருட செயற்கை வைர ஏற்றுமதி மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள்). மேலும் எதிர்காலத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு காண முயற்சி பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்றுமதி மார்க்கெட்டிங் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். இப்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் போது இன்னும் ஐந்து வருட காலத்தில் 7 பில்லியன் டாலர் அளவிற்கு நமது ஏற்றுமதி உயர வாய்ப்பு உண்டு என்று கூறினார். இன்று உலக அளவில் இளைஞர்கள் இது போன்ற செயற்கை வைர நகைகளை அணிவதை விரும்புகின்றனர். இதை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த வருடம் முதல் காலாண்டில் செயற்கை வைர ஏற்றுமதி 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இயற்கை வைர ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே மக்கள் எந்த அளவிற்கு இந்த செயற்கை வைரத்தை விரும்பி வாங்குகிறார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
Export Business Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment