உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு பொருள்களை பங்களாதேஷ் தொடர்ந்து இறக்குமதி செய்து கொண்டு வருகிறது. பெருமளவு பொருள்களை பங்களாதேஷ் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்வது அந்த நாட்டிற்கு குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும். சமீபத்திய தரவுகள் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. பங்களாதேஷ் தனது இறக்குமதியை குறைத்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளின் இறக்குமதி பெருமளவு குறைந்து விட்டது. பங்களாதேஷில் உள்ள மக்கள் விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருளை வாங்குவதில்லை. அதற்கு மாற்றாக உள்ளூரில் கிடைக்கும் விவசாய பொருட்களை வாங்கவே முனைப்பு காட்டுகின்றனர். இதனால் பங்களாதேஷில் உள்ள இறக்குமதியாளர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. டாலருக்கு நிகரான பங்களாதேஷ் நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக பழங்கள் இறக்குமதி 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. பங்களாதேஷில் வீட்டில் வளர்க்கப்படும் பழ மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பங்களாதேஷ் நாட்டில் பழங்களின் விலை விவரங்கள்
ஒரு டஜன் எலுமிச்சம்பழம் 60 லிருந்து 70 டாக்காவிற்கு விற்கப்படுகிறது.
கொய்யாப்பழம் ஒரு கிலோ 120 லிருந்து 140 டாக்காவிற்கு விற்கப்படுகிறது.
பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் உள்நாட்டு சந்தையை நோக்கி திரும்பியதால் உள்நாட்டிலும் சற்று விலை உயர்வு காணப்படுகிறது.
இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது இந்திய ஏற்றுமதியாளர்கள்.
குறிப்பாக பங்களாதேஷ் நாட்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Export Import Business Consultant WhatsApp - 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment