ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்த இந்தியா.

2022ஆம் ஆண்டுக்குள் இந்திய ஏற்றுமதி ஒரு டிரில்லியன் டாலரை எட்டி விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் இந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது.
இதன் மூலம் ஏற்றுமதியும் அதிகரிக்கும், அந்நியச்செலாவணி வரவும் அதிகரிக்கும், இந்தியாவில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
இதற்காக மத்திய அரசு 6 துறைகளை தேர்ந்தெடுத்து உள்ளது.
கெமிக்கல்
மருத்துவ பொருட்கள்
மின்னணு பொருட்கள்
வாகனம் மற்றும் உதிரிபாகங்கள்.
தொழிற்சாலைக்கு தேவையான இயந்திரங்கள்.
டெக்ஸ்டைல்.
இந்தத் துறைகளில் மத்திய அரசு தீவிரம் கவனம் செலுத்துவதால் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
அப்படி அதிகரிக்கும் போது ஏற்கனவே ஏற்றுமதி செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஆர்டர்கள் நிறைய கிடைக்கும்.
புதிதாக ஏற்றுமதி தொழிலுக்கு வருபவர்கள் இந்த துறையில் சாதிக்க வாய்ப்பு உண்டு.
இது போன்ற துறைகளில் ஒரு உற்பத்தி ஏற்றுமதியாளராக நாம் வர வேண்டும் என்றால் பெரிய முதலீடு தேவைப்படும்.  அப்படி முதலீடு செய்ய முடியாதவர்கள் ஜாப் வொர்க் முறையில் உள்நாட்டில் தொழில் செய்து முன்னேற வாய்ப்பு உண்டு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கொடுக்கும் இந்த துறைகளில் ஏற்றுமதி செய்பவர்கள் குறைந்த லாபத்தில் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதும் நிதர்சனம்.
ஏனென்றால் இது போன்ற துறைகளில் நமக்கு பெரிய அளவில் சீனா போட்டியாளராக உள்ளது.

Export Import Business Consultant - WhatsApp 91-9043441374

#export #exportbusiness

Comments