GSP என்னும் நடைமுறை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பலருக்கும் தெரியும்.
இந்த நடைமுறையின் கீழ் நாம் ஏற்றுமதி செய்யும்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் மிக குறைந்த இறக்குமதி வரி செலுத்துவார்கள் அல்லது இறக்குமதி வரியிலிருந்து முழுமையான தள்ளுபடி கிடைக்கும்.
ஆனால் 2023 ஜனவரி முதல் இந்த நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
அதன்படி எலக்ட்ரிகல் மெஷினரி, பிளாஸ்டிக் பொருள்கள், கற்களால் செய்யப்பட்ட பொருள்கள், தோல் பொருட்கள் போன்ற பல பொருள்களுக்கு இந்த சலுகை செல்லுபடி ஆகாது.
இதனால் உலக அளவில் இது போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் நமக்கு போட்டியாக வரும்.
ஆகவே 2023 முதல் இது போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு சவால்.
அதேவேளையில் ஒரு ஆறுதல் செய்தியும் உள்ளது.
நாம் பல்வேறு நாடுகளோடு இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். அதேபோல ஐரோப்பிய நாடுகள் ஒரு சிலவற்றுடன் இலவச ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அப்படி ஒப்பந்தம் செய்த நாடுகளோடு நாம் இந்த பொருட்களை GSP நடைமுறை இல்லாமல் ஏற்றுமதி செய்வது கடினமாக இருக்காது.
Export Import Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness #ஏற்றுமதி
Comments
Post a Comment