ஏற்றுமதி வாய்ப்புடன் வரும் APEDA

ஏற்றுமதி வாய்ப்புடன் வரும் APEDA.

விவசாய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் APEDA  வின் பங்கு அதிகம்.
தொடர்ந்து ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனம் இது.
தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளில் தேன் தேவை அதிகரித்துள்ளது.
ஒரு காலகட்டத்தில் நாம் ஜெர்மனி நாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம்.
கலப்படம் காரணமாக அந்த ஏற்றுமதி தடை பட்டு போனது.
  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய ஜெர்மனி தடைவிதித்தது.
இதனால் உலகளவில் பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து தேன் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தின.
COVID - 19    நோய்தொற்று  பல நாட்டு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மீண்டும் மக்கள் இஞ்சி பூண்டு மஞ்சள் தேன் ஆகியவற்றை அதிக அளவில் உட்கொள்ளத் துவங்கினார்.
மீண்டும் இந்திய தேன் ஏற்றுமதி அதிகரிக்க துவங்கியது.
ஆனால் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா மட்டுமே சுமார் 80 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்து தேனை இறக்குமதி செய்கிறது.
இதை உணர்ந்து கொண்ட APEDA தேன் ஏற்றுமதியை மற்ற நாடுகளுக்கும் அதிகரிக்க முடிவு செய்தது.
இதற்காக இந்தியாவில் பல்வேறு இடங்களில் தரமான தேன் உற்பத்தியாளர்களை கண்டறியும் முயற்சியில் இறங்கியது.
அவர்களுக்கு சர்வதேச  தரத்துடன் கூடிய தேன் உற்பத்தி செய்யும் பயிற்சி மற்றும் ஏற்றுமதி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
உலகில் பல நாடுகளில் உள்ள இந்திய  தூதரகங்கள்  உடன் சேர்ந்துகொண்டு இந்திய தேன் ஏற்றுமதியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் வரும் காலங்களில் தேன் ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
#export #exportbusiness #ஏற்றுமதி
Export Import Business Consultant WhatsApp 91-9043441374

Comments