இந்திய அளவில் ஏற்றுமதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 மாவட்டங்கள்.
ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற கொள்கையுடன் மத்திய அரசு ஏற்றுமதியை மேம்படுத்த முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
இதில் APEDA விவசாய பொருட்கள் ஏற்றுமதியை முழு கவனத்துடன் மேம்படுத்த இந்திய அளவில் 5 மாநிலங்களில் 7 மாவட்டங்களை தேர்ந்தெடுத்துள்ளது.
மாம்பழ ஏற்றுமதிக்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழம் ஏற்றுமதிக்காக நாக்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்காக நாசிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
திராட்சை ஏற்றுமதிக்காக சங்கிலி தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் மாம்பழ ஏற்றுமதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டம் சிறுதானியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள குமரன் பீம் மாவட்டம் சிறுதானியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
APEDA மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகத்துடன் இணைந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாய உற்பத்தியாளர் சங்கத்துடன் இணைந்து பயிரிடுதல், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து ஏற்றுமதியை மேம்படுத்த முயற்சி எடுக்கும்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து ஏற்றுமதி மார்க்கெட்டிங் போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment