கிலோ 5 லட்ச ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்.
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் மரம் அகர் மரம் ஆகும்.
இந்த மரத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த மரம் அடர்ந்த காடுகளில் மிகக்குறைவான இடங்களிலேயே வளர்கிறது.
இந்தியாவிலேயே அகர் மரம் அதிகமாக இருக்கும் இடம் திரிபுரா மாநிலம்.
தற்போது இந்த மாநிலம் அகர் மர ஏற்றுமதிக்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற முயற்சித்துக் கொண்டுள்ளது.
2016 மற்றும் 2017 காலகட்டங்களில் அகர் மரத்தின் விலை ஒரு கிலோ இந்திய மதிப்பு படி 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த காலகட்டத்தில் இதனுடைய சர்வதேச மதிப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு கண்டிப்பாக அதிகமாக இருந்திருக்கும்.
தற்போது கண்டிப்பாக அதன் விலை இன்னும் அதிகரித்திருக்கும்.
திரிபுரா மாநிலம் அகர் மரத்தை துண்டுகளாக ஏற்றுமதி செய்யாமல் மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளது
அகர் மரத்திலிருந்து வாசனை திரவியங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளது.
அகர் மரத்தை மதிப்பு கூட்டும் போது கழிவுகளாக கிடைக்கும் மரச்சீவல்களை கூட ஏற்றுமதி செய்ய திரிபுரா அரசு முடிவெடுத்துள்ளது
திரிபுரா-அசாம் எல்லையில் இதற்கான பிரத்யேக ஏற்றுமதி மையத்தை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த பகுதியில் தான் அதிக அளவு அகர் மரம் உள்ளது.
இந்த முயற்சியால் பெரிய அளவு அன்னிய செலாவணி ஈட்டுவதற்கான வாய்ப்பு உண்டு.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment