ECGC -ஒரு ஏற்றுமதியாளர் எப்படி பயன் பெறலாம்?

ஒரு ஏற்றுமதியாளர் 100% முன்பணத்தை வாங்குவதற்கு இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு.

1. ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

2. ஏற்றுமதி செய்யப்படும் அந்த பொருளுக்கான தேவை இந்த நாட்டில் மிக அதிக அளவில் இருக்க வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களால் மட்டுமே 100% முன் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.

ECGC பல்வேறு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு உதவியாக இருக்கிறது.

LC மற்றும் LC அல்லாத பணப்பரிவர்த்தனை முறைகளை காப்பீடு செய்கிறது.

உதாரணமாக, DA, DP, CAD, OD, TT போன்ற பண பரிவர்த்தனை முறைகள்.

பல ஏற்றுமதியாளர்கள் பொது இன்சூரன்ஸ் மற்றும் ECGC பற்றிய முழு புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்.

பொருட்களைக் கொண்டு போகும்போது ஏற்படும் சேதாரங்களுக்கு பொது இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.

ECGC முழுக்க முழுக்க பணப்பரிவர்த்தனை ஆபத்துகளை பாதுகாக்கிறது.

ECGC மூலம் கீழ்க்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

1. ஒரு இறக்குமதியாளர் திவால் ஆகி விட்டால்...
2. இறக்குமதியாளர் பொருளை எடுத்து விற்பனை செய்யும்போது கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என்ற சூழலில் பொருளை எடுக்க மறுப்பது..
3. வேறு காரணங்களுக்காக பொருளை எடுக்க மறுப்பது..
4. LC வழங்கியுள்ள வங்கி திவாலாகும் போது..
5. இறக்குமதி செய்யும் நாடு பண பரிவர்த்தனையை நிறுத்தும்போது..
6. இறக்குமதி செய்யும் நாடு பண பரிவர்த்தனையை தாமதப்படுத்தும் போது..
7. உள்நாட்டு போர் மற்றும் நிலையற்ற தன்மை ஏற்படும்போது..
8. பொருளை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நாட்டில் அந்த பொருளை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் போது..
9. ஒரு ஏற்றுமதியாளர் ECGC நிறுவனத்தால் நற்சான்றிதழ் கிடைக்கப்பட்ட இறக்குமதியாளருக்கு பொருளை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் அவரது வங்கியிலிருந்து கடன் பெறுவதற்காக வங்கிக்கு உத்தரவாதம் கொடுக்கிறது..
10. இன்றைய தேதியில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான இறக்குமதியாளர்களின் டேட்டா இவர்கள் வசம் உள்ளது..
11. சுமார் 737 நாடுகளை இவர்கள் கவர் செய்கிறார்கள்..
12. மொத்த நாடுகளையும் ரிஸ்க் அடிப்படையில் 7 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
13. ஒரு இறக்குமதியாளர் வெளிநாட்டில்தனக்கு இருக்கும் குடோன் மூலம் வேறொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதற்கான ரிஸ்க் இவர்களால் கவர் செய்யப்படுகிறது.
14. வேறு ஒரு நாட்டில் இருந்து பொருளை வாங்கி பொருளை இந்தியாவிற்கு கொண்டு வராமல் மற்றொரு நாட்டிற்கு சப்ளை செய்யும் போது ஏற்படும் ரிஸ்க் இவர்களால் அவர் செய்யப்படுகிறது..
15. இந்த நிறுவனம் மேற்கண்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 0.007% முதல் அதிகபட்சம் 3.25% வரை மட்டுமே.

WhatsApp 91-9043441374

#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் #export #exportbusiness

Comments