DGFT மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்

DGFT ஏற்றுமதியை மேம்படுத்த DISTRICT AS EXPORT HUB என்ற ஆன்லைன் போர்டல் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கென ஒரு பிரத்யேகமான ட்விட்டர் கணக்கும் துவங்கப்பட்டுள்ளது. இதன் இதன் மூலம் இந்தியா முழுவதும் ONE DISTRICT ONE PRODUCT திட்டத்தின் படி பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும்  தெரிந்துகொள்ளலாம்.

ட்விட்டர் லிங்க் - https://twitter.com/DEH_DGFT?t=ygg2vCbmHMweAWIz2JNNmg&s=09

IEC UPDATE உட்பட பல்வேறு சேவைகளை நாம் பயன்படுத்த DGFT இணையதளத்தை உபயோகிப்பதற்கு பதிலாக DGFT TRADE FACILITATION APP என்ற ஒரு செயலியை உருவாக்கி   உள்ளார்கள்.IEC அப்டேட் செய்யும்போது பல்வேறு இடையூறுகளை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டனர். அது  போன்ற இடையூறுகள் இந்த செயலி மூலம் செய்யப்படும்போது வருவதில்லை என்று DGFT அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் IEC அப்டேட்  ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இலவசமாக செய்துகொள்ளலாம்.  அதற்கு பிறகு IEC அப்டேட் செய்யப்பட்டால் 200 ருபாய் சேவை  செலுத்தவேண்டி இருக்கும்.

தற்போது பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்களில் உறுப்பினராக DGFT மூலமே பதிவு செய்யலாம்.  இந்த பதிவு பொதுவாக RCMC என்று அழைக்கப்படும்.(REGISTRATION CUM MEMBERSHIP CERTIFICATE) மத்திய அரசில் சமீபத்திய அறிவிப்பின்படி SC மற்றும் ST பிரிவினர் RCMC பதிவிற்கு கட்டிய பணத்தில் பாதி (50% அல்லது ருபாய் 20,000 - இதில் எது குறைவோ) திருப்பி அளிக்கப்படும்.  இதற்கு ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஜாதி சான்றிதழ் உட்பட சில ஆவணங்களை DGFT மூலம் சமர்ப்பித்து இந்த சலுகையை பெறலாம்.

Export Business Consultant - 91-9043441374

Comments