இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நமக்கு மிக அருகில் உள்ள நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளோடு இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக நடவடிக்கை என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
நேபாளம் இந்தியாவில் இருந்து தினமும் 6 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்கிறது.
தற்போது அங்கு பொருளாதார சூழலை சரியில்லாமல் இருப்பதால் அத்தியாவசிய மற்ற பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சிமெண்ட்டை நேபாளம் ஏற்றுமதி செய்கிறது.
செப்டம்பர் மாதம் நேபாளத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது இதில் இந்தியா சார்பாக சுமார் 20 நிறுவனங்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூட்டான் ஐ பொருத்தவரை இந்தியாவில் சுமார் 700 கிலோ மீட்டர் எல்லையை பகிர கூடிய நாடு.
பூட்டான் நாலாபுறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு.
கடல்வழி வாணிபம் என்பது இந்தியா மூலமே அவர்களுக்கு சாத்தியம்.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எல்லைப் பகுதியை பகிரும் நாடு பூட்டான்.
பல வருட பாரம்பரிய தொழில் முறை உறவுகளை உள்ளடக்கிய இந்தியா மற்றும் பூட்டான் தற்போது பல புதிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு நாம் கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து ஏற்படும்.
ஆனால் பூடானுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் பூட்டான் நாட்டிற்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து 5,000 டன் கோதுமை மற்றும் 10,000 டன்கள் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்த நடவடிக்கை பூட்டான் அரசு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
பூட்டானில் இருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் இஞ்சி இறக்குமதி செய்வதற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நானோ யூரியா மற்றும் நானோ நைட்ரஜன் உரம் போன்றவை பூடானுக்கு ஏற்றுமதியாகிறது.
பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட இந்த பொருள்கள் பூட்டான் நாட்டிற்கு மட்டும் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
WhatsApp 91-9043441374
#export #exportbusiness #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
Comments
Post a Comment