ஏற்றுமதியை உந்தித்தள்ளும் தமிழக அரசு.

ஏற்றுமதியை உந்தித்தள்ளும் தமிழக அரசு.

கோவில்பட்டியில் தொழிற்பேட்டையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள தொழில் முனைவோர்களுக்கு  தொழிற்பேட்டையில் நிலங்கள் வழங்கும்  விழா நடைபெற்றது.
தமிழக அமைச்சர் தலைமையில் நடந்த இந்த விழாவில் கோவில்பட்டி கடலைமிட்டாய் ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
கோவில்பட்டி கடலை கடலைமிட்டாய்  புவிசார் குறியீடு பெற்ற பொருள்.
பல்வேறு புவிசார் குறியீடு  பெற்ற  பொருளுக்கு  நல்ல மதிப்பு உள்ளது.
  ஏற்றுமதி அதிகப்படுத்தி அன்னியச் செலாவணி  வருவாயை  பெற மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொள்ளும்.
  ஆனால் இங்கு மாநில அரசு ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
கடலைமிட்டாய் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவதற்காக மாநில அரசு 7 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகை கடலை மிட்டாய் ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வதற்காக செலவழிக்கப்படும்.
இதன் மூலம் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாய்ப்புண்டு.
#export #exportbusiness #ஏற்றுமதி 


Comments