அள்ள அள்ள குறையாத லாபம் தரும் இறக்குமதி பொருள்.
இந்தியா பல்வேறு நாடுகளுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்தாலும் இறக்குமதி தொழிலிலும் நல்ல லாபம் உள்ளது.
இந்தியாவில் ஓரளவிற்கு குறைந்த முதலீட்டில் நாம் மேற்கொள்ளக்கூடிய இறக்குமதி தொழில் உலர்ந்த பழங்கள் இறக்குமதி.
நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து நாம் உலர்ந்த பழங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்கிறோம்.
தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் தவிர்த்து சிலி நாட்டில் இருந்தும் நாம் உலர் பழங்களை இறக்குமதி செய்கிறோம்.
சிலி நாடு பழங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.
சிலி நாட்டின் உலக ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது செர்ரி பழம் ஆகும்.
இரண்டாம் இடத்தில் இருப்பது வால்நட்.
இந்தியா அதிக அளவில் வால்நட் உலர் பழங்களை சிலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.
ஒரு கட்டத்தில் மத்திய அரசு உலர் பழங்கள் இறக்குமதி வரியை இரு மடங்காகியது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அந்த ஆண்டில் நமது வால்நட் இறக்குமதி இரண்டு மடங்காகியது.
அந்த அளவிற்கு சிலி நாட்டை சேர்ந்த வால்நட் இந்தியாவில் அதிகளவில் விற்கப்படுகிறது.
www.chilenut.cl என்ற நிறுவனம் வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் வால்நட் பழங்களை ஏற்றுமதி செய்கிறது.
அந்த நிறுவனத்தை சேர்ந்த தலைமை செயல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்த போது வேடிக்கையாக ஒன்றை குறிப்பிட்டார்.
வால்நட் ஏற்றுமதிக்கு நாங்கள் மூன்று நாடுகளை முக்கியமாக கருதுகிறோம் என்றார்.
முதல் நாடு இந்தியா.
இரண்டாம் நாடு இந்தியா.
மூன்றாம் நாடு இந்தியா.
இப்படி அவர் குறிப்பிட காரணம் இந்தியா அதிக அளவில் வால்நட்டை சிலி நாட்டிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல் இறக்குமதியின் அளவு வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இது போன்ற உலர் பழங்களை இறக்குமதி செய்வோர் அதிக அளவில் வட இந்தியாவில் உள்ளனர்.
தெலுங்கானா பகுதியில் ஒரு சிலர் உலர் பழங்களை இறக்குமதி செய்கின்றனர்.
வால்நட் போன்ற உலர் பழங்களை இறக்குமதி செய்து உள்நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்வது நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.
அமேசான் போன்ற இணையத்தளங்களிலும் இறக்குமதி செய்த உலர் பழங்களை விற்பனை செய்ய வாய்ப்புண்டு.
#export #exportbusiness #ஏற்றுமதி
Comments
Post a Comment