இந்திய ஏற்றுமதி வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்றுமதி மட்டுமல்லாமல் இறக்குமதியும் அதிகரிக்கிறது. இந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. சுருக்கமாக சொன்னால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இந்த சூழலில் நாம் இறக்குமதியை குறைக்க வேண்டும். அல்லது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இன்றைய சூழலில் நாம் இறக்குமதியை குறைக்க முடியாது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற அத்தியாவசிய பொருட்களை நாம் இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே மத்திய அரசு ஏற்றுமதியை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சர்வதேச அளவில் நிலவும் உணவு பணவீக்கம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் நாம் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது அல்லது தற்காலிக தடையை விதிக்க வேண்டியிருக்கிறது.
மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்தி உள்ளது.
கோதுமை மாவு மைதா மாவு மற்றும் ரவை ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு நாம் அரிசியை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்.
கடந்த வருடம் ஒரு காலகட்டத்தில் உலகத்தில் உள்ள 50% நாடுகள் நம்மிடம் இருந்தே அரிசி வாங்கினார்கள்.
பாஸ்மதி அரிசி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி இரண்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைக்கின்றன.
இது போன்று நாம் ஏற்றுமதி தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கும் போது அந்நியச் செலாவணி வரவு குறைந்து போகும். ஏற்றுமதிக்கு என நாம் குறிப்பிட்ட லட்சியத்தை அடைய முடியாது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்தால் தான் இந்த நிச்சயமற்ற சூழல் சரியாகும்.
#export #exportbusiness #ஏற்றுமதி
Comments
Post a Comment