அமேசான் நிறுவனம் தங்களது நிறுவனத்தை உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் இன்னும் ஆழமாக காலூன்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் வடஇந்தியாவில் உழவர் சந்தையை திறந்து இருப்பதுதான். தமிழ்நாட்டில் உழவர் சந்தை என்பது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் விதமாக லாப நோக்கம் இன்றி தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு சேவை.
இதுபோன்ற ஒரு சேவையை ஒரு தனியார் நிறுவனம் அதுவும் ஒரு கார்ப்பொரேட் நிறுவனம் மேற்கொள்வது நமக்கு எல்லாம்ஆச்சயர்யமாக இருக்கும். இந்த சேவைக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு வியாபார நோக்கம் உள்ளது. ஆனால் இது போன்ற ஒரு சேவையை அமேசான் மேற்கொண்டதற்கு நாம் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
இந்த உழவர் சந்தை மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருளை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியும்.
இங்கு விளைபொருளை விற்பனை செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருளை அமேசான் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்ய பயிற்சி வழங்கப்படும்.
அதோடு மட்டுமல்லாமல், விளைபொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அந்த சந்தையில் கிடைக்காத பல பொருட்களை அமேசான் இணையதளம் மூலம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் விற்பனையார் மற்றும் வாடிக்கையாளர் ஆகிய இருவரையும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு அமேசான் உபயோகப்படுத்துகிறது.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
#export #exportbusiness #ஏற்றுமதி
Comments
Post a Comment