ஏற்றுமதிக்கு அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகள்..

இந்தியா ஒவ்வொரு வருடமும் ஏற்றுமதிக்கு ஒரு லட்சியத்தை நிர்ணயித்து அதை வெற்றிகரமாக எட்டியுள்ளது.  கடந்த வருடமும் நாம் நிர்ணயித்த ஏற்றுமதி இலக்கை விட அதிகமாக ஏற்றுமதி செய்து சாதித்தோம்.  ஆனால் இந்த வருடம் ஏற்றுமதி இலக்கை எட்டுவது என்பது முடியாது என்று நான் நினைக்கிறன்.  அதற்கான காரணம் இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு பொருள்களுக்கு ஏற்றுமதி தடை மற்றும் கட்டுப்பாடு விதிப்பதுதான்.

சமீபத்தில் நாம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தோம்.

அதன் பிறகு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தற்போது மைதா மாவு மற்றும் ரவை போன்ற பொருள்களுக்கு ஆகஸ்ட் 14 முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை காலத்துக்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்களை ஏற்றுமதி செய்ய சில விதி முறைகளை வகுத்துள்ளது DGFT.

இப்படி தடை காலத்துக்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்களை ஏற்றுமதி செய்ய DGFT மூலம் அனுமதி பெறவேண்டும்.  இந்த அனுமதி மத்திய அமைச்சரவை கூட்டத்தால் மட்டுமே வழங்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.  இந்த அனுமதி பல்வேறு சாத்திய கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.  ஏற்றுமதி அளவு, ஏற்றுமதி செய்யப்படும் நாடு, அந்த நாட்டில் உள்ள உணவு பணவீக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். 

ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்தால், கண்டிப்பாக ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் சான்றிதழ் பெறப்படவேண்டும்.  இந்த இரண்டும் துறைமுகத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே சரக்கு கப்பலில் ஏற்றப்படும்.

Export-Import Consultant WhatsApp - 91-904341374

Comments