சுமார் பத்து மாதங்களுக்கு முன்பாக ஒரு அதிரடி நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது.
அப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நேரம். இந்தியாவுக்கும் தாலிபான்களுக்கும் சுமூகமான உறவு முறை கிடையாது.
ஆப்கானிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி அனைத்து அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினார்.
இப்போது அங்கு நிலைமை சீரடைந்து வந்து கொண்டுள்ளது. இந்தியாவுடன் பல்வேறு கட்ட அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மீண்டும் இந்திய தூதரகம் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பத்து மாதங்களுக்கு பிறகு சுமார் 60 அதிகாரிகள் மீண்டும் காபூலில் உள்ள இந்த தூதரகத்தை திறந்த பொது அப்படியே அதிர்ந்து போனார்கள்.
தலிபான்கள் தூதரகத்தை கடுமையாக சேதப்படுத்தி இருப்பார்கள் என்று நினைத்து சென்ற இந்தியா அதிகாரிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
சில பூட்டுக்கள் மட்டுமே உடைக்கப்பட்டு இருந்தன. மற்றபடி எந்த ஒரு சேதாரமோ அல்லது திருட்டோ நடைபெறவில்லை.
தற்போது தூதரகம் முழு வீச்சில் செயல் பட துவங்கி உள்ளது.
இந்திய பல நூறு கோடி ரூபாய்கள் ஆப்கான் நாட்டு வளர்ச்சிக்கு முதலீடு செய்து இருந்தது. அந்த முதலீட்டை பராமரிக்கவும் இந்தியா மற்றும் ஆப்கான் இடையே வர்த்தகத்தை மேம்படுத்தவும் ஒரு குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
உலகிலேயே தரமான உலர் பழங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் இடம் ஆப்கான்.
உலர் பழங்கள் மட்டுமல்லாமல் திராட்சை போன்ற பல பழங்கள் அங்கிருந்து நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம்.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விமான சேவை என்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. தற்போது வாரம் ஒரு முறை டெல்லி - காபூல் இடையே ஒரு விமான நிறுவனம் சேவையை துவங்கி உள்ளது. மேலும் ஒரு விமான நிறுவனம் மிக விரைவில் சேவையை துவங்க உள்ளது. இதன் மூலம் இரு நாட்டுக்கு இடையே வர்த்தகம் பெருகும்.
பல ஆப்கான் மக்கள் இந்தியாவில் படிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மேலும் பலர் மருத்துவ சேவையை இந்தியாவில் பெற விரும்பி தூதரகத்தில் விசா விண்ணப்பம் செய்ய வரிசையில் நிற்கின்றனர். இதன் மூலம் சேவை துறையில் பெரிய அளவில் அந்நிய செலாவணி இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட நடவடிக்கை மூலம் இந்தியாவில் உலர்பழங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட வாய்ப்பு உண்டு.
WhatsApp 91-9043441374
#export #exportbusiness #ஏற்றுமதி
Comments
Post a Comment