பருப்பு இறக்குமதி தொழில் வாய்ப்புகள்

பருப்பு இறக்குமதி தொழில் வாய்ப்புகள்

இந்தியா ஒரு விவசாய நாடு என்றாலும் ஒரு சில விவசாய பொருட்களின் உற்பத்தி என்பது தன்னிறைவை எட்டவில்லை.

அதில் ஒரு முக்கியமான பொருள் பருப்பு வகைகள்.

பருப்பு வகைகளில் சென்னா தவிர மற்ற பல்வேறு வகையான பருப்புகளை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது.

குறிப்பாக துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு போன்றவற்றை நாம் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக விற்கப்படும் பருப்புகள் பெரும்பாலும் கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

இப்படி இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு இந்தியாவில் விளையும் பருப்பு வகைகளை விட விலை குறைவாக உள்ளது.

தற்போது மேற்சொன்ன இரண்டு பருப்புகளையும் மூன்று நாடுகளில் இருந்து சுங்க கட்டணம் இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அதிகபட்சமாக 0.6 மில்லியன் டன்கள் அளவிற்கு மூன்று நாடுகளிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும்.

அந்த நாடுகள் மியான்மர், மொசாம்பிக் மற்றும் மாலாவி.

இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஐந்து துறைமுகம் வழியாக மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

தூத்துக்குடி, சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹஸிரா போன்ற துறைமுகங்கள் ஆகும்.

இந்த இறக்குமதி வரி விலக்கை பெறுவதற்கு சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் என்ற சான்றிதழ் கட்டாயம்.

மேலும் விபரங்களுக்கு DGFT இணையதளத்தை பார்க்கவும்.

WhatsApp 91-9043441374

Comments