மகாராஷ்டிராவை சேர்ந்த சாதாரண குடும்ப பெண் மீனாட்சி.
பொழுதுபோக்காக கைவினைப் பொருள்களை ஓய்வு நேரத்தில் செய்வதற்கு கற்றுக்கொண்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஆர்வம் ஏற்படவே பல்வேறு பயிற்சிகளை எடுத்துக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத மூங்கில் பொருட்களை கொண்டு பல வித்தியாசமான பொருட்களை விற்பனை செய்து வந்தார்.
அருகில் உள்ள நண்பர்கள் தெரிந்தவர்கள் மூலமாக ஏதோ ஓரளவிற்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்தது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் லாபநோக்கற்ற ஒரு நிறுவனம் இவரிடமிருந்து பிரத்தியேகமாக அவர்களுக்காக செய்யப்பட்ட பொருட்களை வாங்கி உலகம் முழுவதும் அனுப்பி வைத்தனர்.
இதன் மூலம் இவரது திறன் உலக அளவில் வெளிப்பட்டது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவருக்கு ஆர்டர்கள் வரத் துவங்கின.
குறிப்பாக ராக்கி கயிறு மற்றும் ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் போன்றவை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
வெறும் 50 ரூபாய்க்கு ஆரம்பித்த இந்த தொழில் தற்போது மாதம் 3 லட்சம் ரூபாய் இலாபம் ஈட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியில் மட்டுமே நாம் அதிக லாபத்தை சம்பாதிக்க முடியும்.
பல வளர்ந்த நாடுகள் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர்.
கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் இணைய தளத்தை பாருங்கள்.
உங்களுக்கு பல்வேறு கைவினை பொருட்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.
Export Import Business Consultant - WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில் #export #exportbusiness
Comments
Post a Comment