உலகம் முழுவதும் ஏமாற்றுபவர்கள் மற்றும் ஏமாறுபவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஆர்வம் காரணமாக தொழிலை சரிவர புரிந்து கொள்ளாமல் பலர் ஏமாறுகின்றனர்.
பல வருடங்களாக ஏற்றுமதி தொழிலில் உள்ள 10 ஏற்றுமதியாளர்கள் எப்படி ஏமாற்ற பட்டார்கள் என்பதை பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.
இந்தியாவில் திருப்பூர் மாநகரத்தில் நடந்த உண்மை சம்பவம் இது.
தரமான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து, ஏற்றுமதி ஆவணங்களை வங்கியின் மூலமாக இறக்குமதியாளரின் வங்கி அனுப்பி உள்ளனர் இந்த 10 ஏற்றுமதியாளர்கள்.
இதுவே பாதுகாப்பான நடைமுறை.
சர்வதேச வணிக சட்டத்தின்படி ஆவணங்கள் இல்லாமல் கஸ்டம்ஸ் ஏஜென்ட் பொருளை எக்காரணம் கொண்டும் இறக்குமதியாளருக்கு கொடுக்கக்கூடாது.
ஆனால் இங்கு ஆவணங்கள் இல்லாமல் சரக்கு இறக்குமதியாளர்கள் வசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் இறக்குமதியாளர் மற்றும் கஸ்டம்ஸ் ஏஜென்ட் இருவரும் கூட்டு சதி செய்துள்ளனர்.
இந்த தவறு வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடந்துள்ளது.
இந்த நாடுகளிடம் தான் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஏமாந்து இருக்கிறார்கள்.
ஆவணங்கள் இன்னும் வங்கியிலேயே இருக்கின்றன.
ஆனால் பொருள்கள் இறக்குமதியாளர் வாசம் சென்று சேர்ந்துவிட்டது.
இதில் அதிகபட்சமாக ஒரு நிறுவனம் மட்டும் சுமார் ஒன்றேகால் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.
DGFT மற்றும்இந்திய தூதரகம் மூலமாக பணத்தை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு நடைமுறையாகும்.
பணம் எத்தனை நாட்களில் கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது.
இது போன்ற சங்கடங்களை தவிர்க்க ECGC மூலம் கவரை எடுத்துக் கொள்வது சிறந்த வழிமுறையாகும்.
#Export #exportbusiness #ஏற்றுமதி #ஏற்றுமதிதொழில்
WhatsApp 91-9043441374
Comments
Post a Comment