ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கிடையே கடந்த மே 1ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி பல்வேறு ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக டெக்ஸ்டைல் விவசாயம் உலர்ந்த பழங்கள் நவரத்தின கற்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையான வரிவிலக்கு பெறுகின்றனர்.
இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய இறக்குமதியாளர்கள் பலன் தரக்கூடிய ஒரு விஷயம்.
இந்தியாவிலிருந்து இந்த பொருள்களை இறக்குமதி செய்வதால் முழுமையான வரி விலக்கு பெற்று அதிக லாபத்தை இறக்குமதியாளர்கள் ஈட்டமுடியும்.
இந்த ஒப்பந்தம் அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்து, அதாவது மே மற்றும் ஜூன் ஆகிய 60 நாள் காலத்தில், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி 16.22 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
தங்க நகைகள் ஏற்றுமதி மட்டும் மே மாதம் 62% ஜூன் மாதம் 50 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இந்த வாய்ப்பை மேலே சொல்லப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.
இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.
ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6
Comments
Post a Comment