இந்திய அளவில் முதல் இடத்திற்கு வந்த சென்னை #OSOP


நாடு முழுவதும் சுமார் 5000 ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருள்களை விற்பனை செய்வதற்காக கடைகளை திறக்க அனுமதி அளித்தது மத்திய ரயில்வே அமைச்சகம்.

இதன்படி அதிக அளவு மக்கள் போக்குவரத்து இருக்கக்கூடிய ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்கப்பட ஏற்பாடு செய்தன அந்தந்த ரயில்வே கோட்ட அலுவலகங்கள்.

அவற்றில் உள்ளூர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதைப்போல சென்னையில் சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் கடைகள் திறக்கப்பட்டு காஞ்சிபுரம் பட்டுச் சேலை விற்பனை துவங்கியது.

விற்பனை துவங்கப்பட்ட நாள் மே 25, 2022.

கடைகள் துவங்கிய மூன்று மாத காலத்தில் சுமார் ஐம்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.

இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவிற்கு விற்பனை இந்தியாவிலுள்ள எந்த ரயில் நிலையத்திலும் நடக்கவில்லை.

இதேபோல மதுரையில் சுங்குடி சேலை விற்பனை செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் பனை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மிக அதிக அளவில் வருவாய் கொடுத்ததால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள சுமார் 25 ரயில் நிலையங்களில் இது போன்ற உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.

இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.

ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6

Comments