உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உதவும் FIEO.


FIEO நிறுவனம் ஏற்றுமதியை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அவன்படி செப்டம்பர் மாதம் இறுதியில் மூன்று நாட்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஒரு வர்த்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இந்த வர்த்தக கண்காட்சி உஸ்பெகிஸ்தானின் தலைநகரில் நடக்கவுள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சியில் கீழ்கண்ட துறைகளில் ஏற்றுமதி செய்பவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஹோம் டெக்ஸ்டைல்ஸ்.
வீட்டு அலங்கார பொருட்கள்.
ஜவுளி பொருட்கள்.
கைத்தறி மற்றும் நெசவுப் பொருட்கள்.
கைவினைப் பொருள்கள்.
துணி வகைகள்.
நூல் வகைகள்.
உணவு பொருட்கள்.
பால் பொருள்கள்.
உணவு பேக்கேஜிங் துறை.
உறைய வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள்.
மருந்துப் பொருள்கள்.
உடல் நல மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை பொருட்கள்.
வீட்டு உபயோக பொருட்கள்.
சமையலறை உபகரணங்கள்.
கட்டுமான பொருள்கள்.
கட்டுமானத்துறை உபகரணங்கள்.
செராமிக்ஸ் மற்றும் டைல்ஸ்.

இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பதற்கு இரண்டு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

FIEO உறுப்பினருக்கான கட்டணம் ரூபாய் ஒரு லட்சம்.

FIEO உறுப்பினர் அல்லாத நபருக்கான கட்டணம் ரூபாய் 105000.

இந்த கட்டணத்தில் நான்கு நாட்கள் ஹோட்டலில் தங்கும் வசதி, வர்த்தக கண்காட்சியில் ஸ்டால் ஏற்பாடுகள், ஒரு டேபிள் மற்றும் நான்கு நாற்காலிகள், மதிய உணவு, காலை மாலை இரு வேளை தேநீர் உட்பட அனைத்து செலவுகளும் அடங்கும்.

ஹோட்டல் தங்கும் வசதி மற்றும் உணவு ஒரு நிறுவனத்திற்கு ஒரு நபருக்கு மட்டுமே.

கண்காட்சியில் பொருள்களை காட்சிக்கு வைப்பதற்கு எடுத்துச் செல்லும் செலவு மற்றும் அதை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரக்கூடிய செலவு இதில் அடங்காது.

கண்காட்சியில் பங்கேற்ற பிறகு நிறுவனம் சார்பாக ஒரு நபருக்கு விமான கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

விசா பரிந்துரை கடிதம் ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் இரண்டு நபர்களுக்கு வழங்கப்படும்.

கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து நீங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கலாம்.

https://t.co/kpvskNS0Ga

Export Import Consultant - 91-9043441374

Comments