உணவுத் தொழில் ஏற்றுமதியில் ஒரு அற்புத வாய்ப்பு

நாம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் நமக்கு நெருக்கமாக உள்ள நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது மிகவும் எளிதாக இருக்கும்.

இலங்கை, பங்களாதேஷ், நேபாள் போன்ற நாடுகள் நம்மிடமிருந்து பல பொருள்களை தொடர்ந்து இறக்குமதி செய்கின்றன.

தற்போது இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு அதிக அளவு விதிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட நேபாளமும் அதே போன்று சில இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நேபாள நாட்டில் அத்தியாவசியம் இல்லாத பொருள்களை தற்போது இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை.

காய்கறிகள் மற்றும் பழங்களை இந்தியாவிலிருந்து தினமும் 6 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாடு நேபாளம்.

உணவுப் பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவிலிருந்து அதிக அளவு க்ரீம் பிஸ்கட்டுகளை நேபாளம் வாங்கி வருகிறது.

உணவு சார்ந்த பொருட்களை நேபாளம் ஒவ்வொரு வருடமும் சுமார் 1.51 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்கிறது.

இதில் இந்தியாவின் பங்கு 600 மில்லியன் டாலர்கள் ஆகும்.

இதுபோன்ற உணவுப்பொருட்கள் வர்த்தக வாய்ப்பு உள்ள நேபாளத்தில் செப்டம்பர் மாதம் ஒரு வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

FIEO இந்த கண்காட்சியை நடத்துகிறது.

செப்டம்பர் மாதம் 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் இந்த வர்த்தக கண்காட்சி நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற உள்ளது.

இதில் கீழ்க்கண்ட துறைகள் பங்கேற்கலாம் என FIEO அறிவித்துள்ளது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் துறை.
உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்.
ஸ்னாக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள்.
பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்.
மதுபானங்கள்.
உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு.
உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பொருள்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவு.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு மற்றும் பானங்கள்.
பேக்கரி பொருட்கள்.
வர்த்தக சமையலறை பொருட்கள்.
பால் பொருள்கள்
போன்ற நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ரூபாய் 84 ஆயிரம்.

இந்த பணத்திற்கு ஆறு ஸ்கொயர் மீட்டர் அளவுள்ள ஒரு ஸ்டால் ஒதுக்கப்படும்.
ஒரு டேபிள் இரண்டு சேர்கள் உட்பட அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இதில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 10, 2022.

கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

LINK - https://fieo.org/view_detail.php?id=0,22&dcd=8545&evetype=1

Export Import Business Consultant -  WhatsApp 91-9043441374


Comments