நட்சத்திர ஹோட்டல் வாசலில் அவமானப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் .... மூன்று வருடங்களில் நடந்தது என்ன?

ஊட்டியில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல் அது.

ஒரு ஆட்டோ ரிக்ஷா அதன் வாசலில் தடுத்து நிறுத்தப்படுகிறது.

அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சிறிதும் பொருந்தாத அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மனைவி இருவரையும் அங்கிருந்து அகன்று போகச் சொல்கிறார் வாட்ச்மேன்.

தாங்கள் இருவரும் இரவு விருந்துக்காக அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்று அவர்கள் கூறினாலும் அது ஏற்கப்படவில்லை.

தன்னை விருந்துக்கு அழைத்த அந்த நபருக்கு போன் செய்ய, அவர் வந்து இருவரையும் உள்ளே அழைத்துச் செல்கிறார்.

மிக ஆடம்பரமான அந்த ஹோட்டல் உள் அலங்காரம் மற்றும் இருக்கைகளை கண்டு இருவருக்கும் மிகுந்த பிரமிப்பு.

அவர்களை விருந்துக்கு அழைத்த அந்த நபர் ஒரு ஆடிட்டர்.

முந்தைய நாள் இரவு இந்த ஆட்டோ டிரைவரின் வீட்டருகே ஆடிட்டரின் கார் ரிப்பேராகி நின்றுவிட்டது.

அப்போது இரவு 11 மணி.

கடுமையான குளிர்.

ஆடிட்டர் குடும்பத்தை சேர்ந்த சுமார் ஏழு பேரையும் தனது வீட்டில் பாதுகாப்பாக இருக்கச் சொன்னார் அந்த ஆட்டோ டிரைவர்.

ஹோட்டலிலிருந்து மாற்று கார் வருவதற்கு மணி 12 ஐ தாண்டிவிட்டது.

ஹோட்டல் கார் வந்த பிறகு அனைத்து உடமைகளையும் மாற்ற உதவி செய்து அவர்களை பத்திரமாக ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர் ஆட்டோ டிரைவரும் அவரது மனைவியும்.

அதற்கான நன்றிக் கடன் தான் இன்றைய இரவு விருந்து.

ஆடிட்டர் குடும்பம் பெரியது.

ஆட்டோ டிரைவரும் அவரது மனைவியும் இதுவரை கேள்விப்பட்டிராத சுவையான தரமான உணவை ருசித்தனர்.

ஆடிட்டர், ஆட்டோ டிரைவரின் குடும்ப வருமானம் பற்றி கேட்டறிந்தார்.

மனைவி வேலைக்கு செல்லவில்லை.

ஆனால் பட்டப்படிப்பு படித்திருக்கிறாள்.

ஆட்டோ டிரைவர் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.

ஆட்டோ வருமானத்தை நம்பியே குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.

ஊட்டியில் தரமான பொருள்கள் என்னென்ன கிடைக்கும் என்றும் கேட்டறிந்தார் ஆடிட்டர்.

தரமான தேயிலை, காப்பி கொட்டைகள், மற்றும் ஹோம்மேட் சாக்லேட் போன்றவை கிடைக்கும் என்று ஆட்டோ டிரைவரின் மனைவி கூறினார்.

ஆடிட்டர் அதிக முதலீடு இல்லாம ஒரு தொழில் வாய்ப்பை ஆட்டோ டிரைவருக்கு அவரது மனைவிக்கும் விளக்கிக் கூறினார்.

இந்த தொழிலை பதிவு செய்யும் அனைத்து நடைமுறைகளையும் தானே செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார் ஆடிட்டர்.

சுமார் மூன்று மாத காலத்தில் ஆட்டோ டிரைவரின் மனைவியின் பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

காபி கொட்டைகள் மற்றும் டீ தூள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக ஒரு டிரேட்மார்க் பிராண்ட் பதிவு செய்யப்பட்டது.

அமேசான் இணையதளத்தில் அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக காபி மற்றும் டீ கான ஆர்டர் வந்தது.

இவர்களின் சொந்த ஊர் ஊட்டி என்பதால் பல்வேறு எஸ்டேட்டில் இருந்து தரமான காபி கொட்டைகள் மற்றும் டீ தூளை இவர்களால் வாங்க முடிந்தது.

தரம் காரணமாக நல்ல ரிவ்யூ கிடைக்க துவங்கியது.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் பெருகியது.

ஆடிட்டர் அவ்வப்போது விற்பனை வாய்ப்பை பற்றி கேட்டறிந்தார்.

சுமார் ஆறு மாத காலத்தில் இதே நிறுவனம் Amazon Global Selling  தளத்தில் பதிவு செய்யப்பட்டது.

பிரகு இவர்கள் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யத் துவங்கினர்.

மூன்று வருட காலம்..

அவர்களின் வாழ்க்கை தரம் பெருமளவு உயர்ந்திருந்தது.

அவர்கள் பொருளாதாரத்தில் எந்த அளவு முன்னேறி இருந்தார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இதோ..

மூன்று வருடங்களுக்கு முன்பு எந்த ஹோட்டலின் வாசலில் வாட்ச்மேன் அவர்களை உள்ளே விட மறுத்தாரோ, அதே வாட்ச்மேன் இப்போது இவர்களுக்கு சல்யூட் அடித்து கார் கதவை திறந்து விடும் அளவிற்கு இவர்களது முன்னேற்றம் இருந்தது.

ஒரு குடும்பத்திற்கு செய்த சிறிய உதவி எவ்வளவு பெரிய பலனை கொடுத்திருக்கிறது.

https://youtube.com/c/EXPORTIMPORTCONSULTANT

Comments