ஏற்றுமதியில் லாபத்தை அள்ளித் தரும் ஒரு துறை - தொழில் துவங்க இது சரியான தருணம்.

உலகம் முழுவதும் நோய்தொற்று காலத்தில் பல்வேறு துறைகள் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்தியாவிலும் இதுவே நடந்தது.

பல துறைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

பல நாடுகளில் மக்கள் வேலை இழந்தனர்.

சிலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டது.

மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் திறன் இழந்தனர்.

அத்தியாவசிய பொருட்களான தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்கிய ஆக வேண்டிய சூழல் இருந்தது.

இந்தப் பொருட்களின் ஏற்றுமதி மட்டும் பாதிக்கப்படாமல் இருந்தது.

ஆனால் ஒரு துறை மட்டும் இந்த நோய்த்தொற்று காலத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் வளர்ந்துகொண்டே இருந்தது.

இன்னும் வளர்ந்து கொண்டுள்ளது.

அதுதான் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களின் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

நம்மிடம் இருந்து அதிக அளவு கடல் உணவுப் பொருள்களை வாங்கும் இரண்டு நாடுகள் சீனா மற்றும் அமெரிக்கா.

கடல் உணவுப் பொருட்களில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தான் அதிக அளவு இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 7.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நாம் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.

இது, இது வரை எட்டப்படாத ஒரு புதிய உச்சம்.

கடல் உணவு பொருட்கள் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஏற்றுமதியில் கால் பதிக்க இதுவே சரியான தருணம்.

Export Import Business Consultant - WhatsApp 91-9043441374

https://youtube.com/c/EXPORTIMPORTCONSULTANT


Comments