ஏற்றுமதியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள்..

ஏற்றுமதி வர்த்தகத்தில் அடிக்கடி பேசப்படும் ஒரு விஷயம் காலதாமதம்.

சரியான நேரத்தில் பொருளை இறக்குமதியாளர் இடம் கொண்டு சேர்ப்பது மிக மிக முக்கியம்.
உதாரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கணக்கிட்டு ஒரு இறக்குமதியாளர் ஆடர் கொடுத்திருப்பார்.
கிறிஸ்மஸ் பண்டிகை முடிந்து அந்த பொருள் அவர் கையில் போய் சேர்ந்தால் அதை விற்பது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகிவிடும்.
ஆகவே மிகச்சரியாக அனைத்து விஷயங்களையும் கணக்கிட்டு இறக்குமதியாளர் ஆர்டர் கொடுப்பார்.
பெரும்பாலான ஏற்றுமதி-இறக்குமதி ஆர்டர்களை குறிப்பிடப்படும் ஒரு விஷயம் குறிப்பிட்ட தேதி அல்லது அதற்கு முன்பாக பொருள்களை கப்பல் அல்லது விமானம் மூலமாக அனுப்பாவிட்டால் இந்த ஆர்டர் காலாவதியாகிவிடும் என்பதாகும்.
ஆகவே காலதாமதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அதைப்போல ஏற்றுமதி வர்த்தகத்தில் தரம் என்பது மிக மிக முக்கியம்.
நல்ல தரத்தையும் சரியான நேரத்திற்கு ஏற்றுமதியும் செய்யும் ஏற்றுமதியாளர்கள் தொழிலில் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள்.
தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு வேறு ஒரு சிக்கல் வந்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் கொச்சின் துறைமுகங்கள் மிகச்சிறிய சரக்கு கப்பல் வந்து செல்வதற்கு ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இங்கிருந்து ஏற்றிச் செல்லப்படும் சரக்கு கொழும்பு துறைமுகத்தில் மிகப் பெரிய கப்பலுக்கு மாற்றப்படும்.
இப்படி மாற்றப்படுவதற்கு சுமார் ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை ஆகலாம்.
தற்போது இதற்கு சுமார் 15 நாட்கள் வரை ஆகிறது .
கொச்சின் துறைமுகம் ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது.
அதன் மூலம் சற்று பெரிய கப்பல்கள் வந்து செல்ல இயலும்.
அதேபோல தூத்துக்குடி துறைமுகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
சென்னை துறைமுகத்தில் சற்று பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதி இருப்பதால் பல ஏற்றுமதியாளர்கள் தூத்துக்குடியை தவிர்த்து சென்னை துறைமுகத்தை நாடி உள்ளனர்.
இதன் மூலம் சென்னை துறைமுகம் சரக்கு போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்த கால தாமதம் காரணமாக இறக்குமதியாளர்கள் தற்போது ஏற்றுமதி செய்யும் காலகட்டத்தை குறைத்துள்ளனர்.
இது ஏற்றுமதியாளர்களுக்கு சவாலாகும்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.

இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.

ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6

Comments