பூட்டான் - இந்தியா இடையே உருவான புதிய வர்த்தகம்.


உருளைக்கிழங்கு இந்தியாவில் அதிகமாக உட்கொள்ளப்படும் ஒரு உணவுப் பொருள்.
குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு இல்லாத ஒருநாள் என்பது சாத்தியமல்ல.
தற்போது உருளைக்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான பூட்டான் அதிக அளவு உருளைக்கிழங்கை விளைவிக்கிறது.
அவர்களால் விளைவித்த உருளைக்கிழங்கை சரியாக விற்பனை செய்ய முடியவில்லை.
இந்தியாவிற்கு பூட்டானில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதிலும் கட்டுப்பாடு இருந்தது.
தற்போதைய உருளைக்கிழங்கு விளைச்சலை மனதில் கொண்டு இந்திய அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்தது.
அதன்படி பூட்டானில் இருந்து ஒரு வருட காலத்திற்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் உருளைக்கிழங்கை இந்தியாவிற்கு இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.
இதன் மூலம் இந்தியாவில் உணவுப் பொருள் விலை குறியீடு குறைவதற்கு வாய்ப்புண்டு.
அதேநேரத்தில் பூட்டான் விவசாயிகள் பயன் பெறவும் வாய்ப்புண்டு.
வட இந்தியாவில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கு இறக்குமதி தொழிலை மேற்கொண்டு பயன்பெறலாம்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.

இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.

ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6

Comments