நோய்தொற்று காலத்தில் பல்வேறு தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
ஆனால் இந்தியாவில் விவசாயத்துறை மட்டும் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
இதன் பலன் நமக்கு மிக விரைவிலேயே கிடைக்க ஆரம்பித்தது.
உலக அளவில் அரிசிக்கான தேவை உயர்ந்தது.
நம்மைப்போல் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட அரிசி விளைச்சல் குறைவால் பாதிக்கப்பட்டன.
ஆனால் இந்தியாவிலோ விவசாயத்துறை பாதிக்கப்படாததால் அரிசி ஏற்றுமதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் துவங்கியது.
ஒரு கட்டத்தில் உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் நம்மிடமிருந்து அரிசி வாங்கிக் கொண்டிருந்தன.
நமக்கு போட்டியாக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெருமளவு அந்நிய செலாவணி உள்ளே வந்தது.
பிறகு அடுத்த அறுவடை காலத்தில் நம்மிடமிருந்து அரிசி வாங்கிக்கொண்டு இருந்த நாடுகள் நல்ல விளைச்சலை கண்டன.
அவர்கள் மீண்டும் அரிசி ஏற்றுமதிக்கு வந்தனர்.
நமக்கு போட்டியாக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் சீனா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா.
இந்த நாடுகளில் தற்போது மீண்டும் அரிசி விளைச்சல் குறையத் துவங்கியுள்ளது.
இதற்கு காரணம் அபரிமிதமாக விலை உயர்ந்த உரம்.
உரத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் உரத்தின் தேவை அதிகரித்தது.
விலையும் உயர்ந்தது.
பல நாடுகளால் அதிக விலை கொடுத்து உரத்தை வாங்கி விவசாயம் செய்ய முடியவில்லை.
ஆகவே விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது.
சீனாவில் உர விலை ஏற்றம் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.
ஏனெனில் அவர்களே பல்வேறு நாடுகளுக்கு உரத்தை ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஆனால் சீனாவில் வேறு ஒரு பிரச்சனை வந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பூச்சித்தாக்குதல் இருந்ததால் அரிசி விளைச்சல் சுமார் 10% பாதிக்கப்பட்டது.
இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மீண்டும் உலக அளவில் அரிசி தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமக்கு போட்டியாக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் முதலில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள், பிறகு ஏற்றுமதி செய்வார்கள்.
தற்போது உர விலை ஏற்றம் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி குறைந்ததால் அவர்களது ஏற்றுமதியும் குறைவதற்கு வாய்ப்புண்டு.
அந்த சமயத்தில் மீண்டும் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி வாய்ப்பு வரும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
ஆனால் இந்த அரிசி ஏற்றுமதி வாய்ப்பை இந்தியாவால் பயன்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.
ஏனெனில் இந்தியாவில் தற்போது பருவம் தப்பிய மழை மற்றும் வெப்ப அலை காரணமாக அரிசி மற்றும் கோதுமை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டது போல அரிசி ஏற்றுமதிக்கும் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.
இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.
ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6
Comments
Post a Comment