நாம் உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருந்தாலும் இந்தப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம்.
இந்தியா ஒரு வளரும் நாடு.
பல்வேறு நாடுகளிலிருந்து முதலீடுகளில் இங்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இந்திய அரசும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நிறைய முதலீடுகளை செய்துள்ளது.
அதில் ஒரு முக்கியமான துறைதான் கட்டுமானத்துறை.
கட்டுமானத் துறைக்கு மிக அத்தியாவசியமான பொருள் சிமெண்ட்.
கடந்த சில வருடங்களாகவே சிமெண்ட் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.
பெரிய அளவில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் இந்தியா தற்போது முதல் முறையாக நேபாளத்திலிருந்து சிமெண்ட்டை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம் கட்டுமான செலவினங்கள் குறையும்.
பொருளாதாரச் சிக்கலில் தவித்து வரும் நேபாளத்திற்கு இது ஒரு நல்ல செய்தி.
நேபாளத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்று முதல்முறையாக 3000 சிமெண்ட் மூட்டைகளை லாரி மூலம் இந்தியாவிற்கு அனுப்பி உள்ளது.
மேலும் மிக விரைவில் அதிக அளவு சிமெண்ட் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வோம் என்று கூறியுள்ளது.
இந்தச் சூழலில் சிமெண்டு ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக நேபாளத்திலிருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு 8 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
பெரிய அளவில் சிமெண்ட் தேவையுள்ள இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் இந்த நிறுவனத்திற்கு நல்ல லாபம்.
அரசு அளிக்கும் மானிய தொகை மூலமும் இந்த நிறுவனத்திற்கு வருமானம் அதிகரிக்கும்.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.
இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.
ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6
Comments
Post a Comment