விவசாயிகளுக்காக ஸ்பைசஸ் போர்டு நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சி


ஸ்பைசஸ் போர்டு நிறுவனம் என்பது மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியமான இது ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

பல்வேறு நாடுகளில் உள்ள வாசனைப் பொருட்களின் தேவையை அறிந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும் மத்திய அரசின் அமைப்பு இது.

இந்த அமைப்பு தற்போது இந்திய விவசாயிகளை ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் உடன் இணைந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஸ்பைசஸ் பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிர்களை தாங்களே இ காமர்ஸ் தொழில் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்ய இப்போது இந்த நிறுவனத்தால் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இது விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

ஏற்றுமதி மட்டும் அல்லாமல் உள்நாட்டு தொழிலிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்பைசஸ் போர்டு எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆலோசனைக்கு WhatsApp 91-9043441374

Comments