மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஊர் ஜலந்தர்.
இங்கு விவசாயி ஒருவர் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நபர் அவர்.
மனைவி மற்றும் ஒரு மகன்.
மகன் படித்து முடித்து விட்டு ஜப்பானுக்கு வேலைக்கு செல்கிறான்.
ஜப்பானின் வாழ்க்கை முறை அவனை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
ஜலந்தரை விட்டு வெளியே செல்லாத அம்மாவையும் அப்பாவையும் சிறிது காலம் சென்று ஜப்பானுக்கு அழைத்துச் செல்கிறான்.
அவர்களுக்கும் அது மிகப்பெரிய பிரமிப்பாக இருந்தது.
சிலகாலம் ஜப்பானில் மகனோடு தங்கியிருந்தனர்.
அங்கும் அவரது விவசாய தேடல் ஆரம்பமானது.
எதார்த்தமாக ஒரு நாள் அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றபோது அவர் ஒரு மாம்பழத்தை பார்த்தார்.
அந்த கடை உரிமையாளர் அந்த மாம்பழத்தின் பெருமை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
நம்மூர் மாம்பழம் போல அல்லாமல் அது வயலட் கலரில் இருந்தது.
ஒரு ஜோடி மாம்பழத்தின் விலை சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு இருந்தது.
விலையைக் கேட்டதும் அவருக்கு மயக்கமே வந்துவிட்டது.
அதன் பிறகுதான் தெரிந்தது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் மாம்பழம் இதுதானென்று.
இந்த மாம்பழத்தை வயலட் மாம்பழம் அல்லது நயாசாகி மாம்பழம் என்று அழைக்கிறார்கள்.
அந்த மாம்பழத்தை விளைவிக்கும் விவசாயி தேடி கண்டுபிடித்து அவரிடம்அந்த குறிப்பிட்ட ரக மாம்பழத்தை விளைவிக்கும் முறைகளை கற்றுக் கொண்டார்.
அவரிடமிருந்து இரண்டு மாங்கன்றுகள் பெற்று அதை இந்தியாவிற்கு பத்திரமாக கொண்டு வந்தார்.
தனது வீட்டுத் தோட்டத்தில் 2 மாம் கன்றுகளை வளர்க்க துவங்கினார்.
வருடங்கள் உருண்டோடின.
மா மரம் வளர்ந்து கனி கொடுக்க ஆரம்பித்தது.
அவருக்கு பிரச்சனையும் ஆரம்பித்தது.
இரவு நேரங்களில் மாம்பழங்கள் திருடு போக ஆரம்பித்தன.
அப்போதுதான் ஜப்பானிலிருந்து மகன் ஒரு முக்கியமான தகவல் சொன்னான்.
ஜப்பானில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு ஒரு ஜோடி வயலட் மாம்பழங்கள் விற்பனையாகிறது என்ற தகவல் அது.
மாமரத்தை பாதுகாக்க போலீஸ் உதவியை நாடினார்.
ஏமாற்றமே மிஞ்சியது.
மகனின் ஆலோசனைப்படி தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அணுகி மாம்பழங்கள் திருடு போவதை தடுக்க முயற்சி மேற்கொண்டார்.
24 மணி நேரமும் 2 மாமரத்தை மூன்று காவலர்கள் காவல் காக்க ஆரம்பித்தனர்.
அதுபோக 6 வேட்டை நாய்களும் காவல் காக்க ஆரம்பித்தன.
மாம்பழங்களை ஜப்பானுக்கு விமானம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.
மிகப் பெரிய அளவில் வருமானம் கட்டியது.
இதுபோன்ற மாம்பழம் ஜப்பான் பிலிப்பைன்ஸ் தவிர தற்போது இந்தியாவில் இவர் மட்டுமே வளர்த்து வருகிறார்.
சீசன் காலங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது கூட இவரால் ஒரு ஜோடி மாம்பழம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடிந்தது.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.
இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.
ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6
Comments
Post a Comment