ஏற்றுமதி இறக்குமதியில் முக்கியத்துவம் பெறும் கொச்சி துறைமுகம்.

ஏற்றுமதி இறக்குமதியில் முக்கியத்துவம் பெறும் கொச்சி துறைமுகம்.

கடல்வழி போக்குவரத்தில் துறைமுகத்தின் ஆழம் என்பது மிக மிக முக்கியமானது.
இந்தியாவில் எந்தத் துறைமுகத்திலும் மிகப் பெரிய கப்பல்கள் வந்து நின்று செல்வதற்கு வசதி இல்லை என்பதை உண்மை.
இங்கு உள்ள சிறிய கப்பல்களில் அனுப்பப்படும் பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் மிகப் பெரிய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும்.
தற்போது கொழும்பு துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது.
சில கப்பல்கள் வாரக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் நிலை கூட ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை கையாள்வதற்காக கொழும்பு துறைமுக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காலதாமதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இதை உணர்ந்த இந்திய அரசு தற்போது முதல்கட்ட நடவடிக்கையாக கொச்சி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது கொச்சி துறைமுகத்தின் ஆழம் 14.5 மீட்டர் ஆகும்.
அதை 18 மீட்டராக ஆழப்படுத்த முடிவெடுத்துள்ளது இந்திய அரசு.
இதன் மூலம் மிகப்பெரிய கப்பல்களை கொச்சி துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்த முடியும்.
இதன்மூலம் சற்று பெரிய அளவிலான கப்பல்களின் போக்குவரத்து கொச்சி துறைமுகத்தில் அதிகமாகும்.
இதுமட்டுமில்லாமல் துறைமுகத்தில் கன்டெய்னர்களை கையாளப்படும் நிலப்பரப்பு இரண்டு மில்லியன் TEU ( 20 feet equivalent unit). இது மூன்று மில்லியனாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த நிலப்பரப்பில் 40% மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
ஆழப்படுத்துதல் பணி முடிந்தபிறகு பெருமளவு கன்டெய்னர்களை கையாள்வதற்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
Export import business consultant - WhatsApp 91-9043441374


Comments